Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி.... வைரமுத்து உருக்கமான டுவீட் !!

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (13:51 IST)
களப்பலியானவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி.... வைரமுத்து உருக்கமான டுவீட் !!

ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படிப்பிடில் நேர்ந்துள்ள கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டில் இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணிகளை ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென கிரேன் அறுந்து விழுந்தது.
 
இதில் இயக்குனர் ஷங்கரின் துணை இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் பிஏ மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என மூன்று இறந்துவிட்டனர். 10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தமிழ் திரையுலகமே கருப்பு தினமாக மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்த துணை இயக்குனர் கிருஷ்ணா பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் விமர்சகரான மதன் அவர்களின் மருமகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான டுவீட் பதிவிட்டுள்ளார். அதில்,
கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.
கண்ணீரையும் மனிதத் தவறுகளையும்
ஒருசேரத் துடைத்துக் கொள்வோம்;
வலியோடு பயணிப்பதே வாழ்வு.
வருந்துகிறேன். என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments