Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க படத்துல நடிக்கிறேன்… ஆனா வெயிட் பண்ணுங்க- முருகதாஸுக்கு வந்த சோதனை!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (15:51 IST)
இயக்குனர் முருகதாஸ் தனது திரைவாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம். ஆனால் ஒரு காலத்தில் அவர் படத்தில் நடிக்க ஏங்கிய நடிகர்கள் எல்லாம் இப்போது தயக்கம் காட்டுகின்றனராம்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் இப்போது அபரிவிதமான வளர்ச்சியில் இருக்கும் அல்லு அர்ஜுனிடம் முருகதாஸ் கதை சொல்லியுள்ளார். அல்லு அர்ஜுனுக்கும் கதை பிடித்துள்ளதாம். ஆனால் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தம் ஆன இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டுதான் உங்களுக்கு தேதிகள் கொடுப்பேன் என சொல்லியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments