Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல்-மகேஷ்பாபு?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல்-மகேஷ்பாபு?
, திங்கள், 7 ஜூன் 2021 (21:08 IST)
பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மகேஷ்பாபு நடிக்க உள்ள திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ஏஅர் முருகதாஸ் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்கி இருந்தார். ஆனால் திடீரென எதிர்பாராத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். இதனை அடுத்து இன்னும் அவர் அடுத்த படத்துக்கான அறிவிப்பை தொடங்கவில்லை
 
இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் மகேஷ் பாபு இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தமிழ் உட்பட பல மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஏஅர் முருகதாஸ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என்றும் கமல் ஹாசன் மற்றும் மகேஷ் பாபு தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்த பின்னர் தான் தொடங்கும் என்றும் இந்த படம் 2024ல் தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு தந்தையாக கமல் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது அடுத்த படத்தின் கதை இதுதான்: கிருத்திகா உதயநிதி