Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தலைவர் 168’ படத்தில் 3 கதாநாயகிகளா?

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (22:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வர உள்ள நிலையில், அடுத்ததாக அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ’தலைவர் 168’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த தேர்வு தற்போது கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் குஷ்பு, மீனா, மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும், ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிக்கவிருப்பதாகவும், குஷ்புவுக்கு கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி போன்ற ஒரு நெகட்டிவ் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக ஒரு முன்னணி இளம் நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ரஜினிகாந்த் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையில் நடிக்கிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கிராமத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி படையப்பா படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், இயக்குனர் சிவா ஒரு சென்டிமென்ட் கலந்த முழுக்க முழுக்க ஒரு குடும்பப் பின்னணியைக் கொண்ட கதையை உருவாக்கி இருப்பதாகவும் தெரிகிறது.
 
மொத்தத்தில் குடும்ப சென்டிமென்ட், ஆக்சன், அதிரடி, காமெடி என அனைத்தும் கூடிய ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படமாக ’தலைவர் 168’  படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments