Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர்ஸ்டாரின் பங்களாவில் பதுங்கிய 2 மர்ம இளைஞர்கள் கைது...

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (17:54 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் பங்காவில் நுழைந்து பதுங்கியிருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில், ஜனவரி மாதம் தேதி வெளியான படம் பதான். இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து, தொடர்ந்து தோல்வியடைந்த வந்த பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,மும்பையிலுள்ள ஷாருக்கானின் மன்னத் என்ற பிரமாண்ட பங்களாவின் 3- வது மாடியில் உள்ள அவரது மேக்கப் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து 2 இளைஞர்கள் பதுங்கி இருந்தனர்.

இதுபற்றி, ஷாருக்கானின் மேலாளர் கல்லீன் டிசோசா  புகாரளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்  2 இளைஞர்களைக் கைது செய்தனர்.

அந்த இளைஞர்கள், இருவரும் சுவர் தாண்டி, பங்களாவுக்குள் குதித்து,  அதிகாலை 3 மணிக்கு 3 வது தளத்திற்குச் சென்று காலை 10:30 மணி வரை காத்திருந்துள்ளனர் என்று மேலாளர் போலீஸில் கூறியுள்ளார்.

ALSO READ: டங்கல் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பதான்… பாலிவுட் சினிமாவில் புதிய உச்சம்!
 
2 இளைஞர்களைப் பார்த்து ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பங்களாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் 2 பேர் மீது  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருவதாகத்  தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments