Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சார் பிரச்சனை - சீனாவில் வெளியாகிறதா 2.0 ?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (08:35 IST)
இந்தியாவின் அதிக பட்ஜெட் படமாக வெளியாகியிருக்கும் 2.0 படம் இன்னும் சீனா மற்றும் ஜப்பானில் வெளியாகவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அக்‌ஷய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது 2.0 திரைப்படம். இந்தியா முழுவதும் மிகப் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள இந்த படம் கிட்டத்தட்ட 9000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலிசாகி உள்ளது.

ரிலிசாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படம் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலைப் பொறுத்தவரை நேர்மறையாகவே இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

2.0 படம் ரஜினியின் ரசிகர்கள் அதிகமாக உள்ள ஜப்பான் நாட்டில் இன்னும் ரிலிஸ் ஆகவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பானில் கூடிய விரைவில் ரிலிஸ் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேப் போல சமீபகாலமாக இந்தியப் படங்களுக்கு பெரும் சந்தை உருவாகியுள்ள சீனாவிலும் இந்தப்படம் இன்னும் ரிலிசாகவில்லை. பிகே, டங்கல், பாகுபலி 2 என இந்தியப் படங்கள் சீனாவில் சக்கைப் போடு போட்டன. அந்த வரிசையில் 2.0 படமும் அதிகளவில் அங்கு ரிலிசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்சனைகளால் இன்னும் 2.0 படம் சீனாவில் ரிலிஸாகவில்லை. சீனாவில் சென்ஸார் ஆக இன்னும் 3 மாதக் காலம் ஆகும் எனத் தெரிகிறது. அதன்பிறகே 2.0 படம் சீனாவில் ரிலிசாகும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments