Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 வருடங்களுக்கு பிறகு இணையும் நடிகர் சரத்குமார், நெப்போலியன் கூட்டணி

Advertiesment
12 வருடங்களுக்கு பிறகு இணையும் நடிகர் சரத்குமார், நெப்போலியன் கூட்டணி
, வியாழன், 1 ஜூன் 2017 (15:32 IST)
நடிகர் சரத்குமார்  தற்போது கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சென்னையில் ஒருநாள்-2’. கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான ‘தென்காசிபட்டணம்’ திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரும், நடிகர் நெப்போலியனும் இணைந்து நடித்திருந்தார்கள்.

 
பிறகு 2005-ல் வெளிவந்த ’ஐயா’ திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தில்  மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். நடிகர் சரத்குமார், இயக்குநர் சேரன், நடிகர் பிரசன்னா, ராதிகா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘சென்னையில் ஒருநாள்’ திரைப்படத்தை போன்று பரபரப்பான திரில்லர் படம் என்பதால் இப்படத்திற்கும் அதே பெயரை வைத்துள்ளனர். இப்படத்தில் நடிகர் சரத்குமார் ரகசிய உளவாளியாகவும், நடிகை  சுஹாசினியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை புதுமுக இயக்குநர் ஜெ.பி.ஆர் இயக்கி உள்ளார். புதுமுக இசையமைப்பாளர் ராண்  இசையமைக்க, தீபக் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலோட பெண்ணூங்கர அந்தஸ்து எனக்கு தேவையில்லை: சுருதிஹாசன் அதிரடி!!