ராஞ்சனா இரண்டாம் பாகம் கிடையாது - இயக்குனர்
, சனி, 27 ஜூலை 2013 (10:54 IST)
ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் கிடையாது. அந்த கதை அவ்வளவுதான், அதற்கு மேல் எதுவுமில்லை எனக் கூறியிருக்கிறார், படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய்.
ராஞ்சனா படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்ததை மும்பையில் பார்ட்டி வைத்து கொண்டாடினர். ஒரு புதுமுகத்தின் - அதுவும் தென்னிந்தியாவிலிருந்து வந்த நடிகரின் முதல் படமே நூறு கோடியை வசூலிப்பது சாதனை. இந்த வெற்றிக்கு ஒரேயொரு மனிதர்தான் காரணம், அவர் ஆனந்த் எல்.ராய் என தனுஷ் தெரிவித்தார்.தொடர்ந்து இந்தியில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, நிறைய வாய்ப்புகள் வருகிறது, ராஞ்சனா மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் அமைந்தால் நடிப்பேன் என தெரிவித்தார். ஆனந்த் எல்.ராயிடம் ராஞ்சனா படத்தின் சீக்வெல் குறித்து கேட்டதற்கு, அந்தக் கதை அதோடு முடிந்துவிட்டது. சீக்வெல் நிச்சயமாக கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.