Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிரத்னம் படத்தில் மம்முட்டி மகன்...?

Advertiesment
மணிரத்னம்
, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (18:23 IST)
மணிரத்னம் தெலுங்கு, தமிழில் நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை இயக்குவதாக சொல்லப்பட்டது. மணிரத்னத்தின் மனைவி சுஹாசினியும் அதனை உறுதி செய்தார். ஆனால் படம் இன்னும் டேக் ஆஃப் ஆகாமல் உள்ளது.
 
பேச்சுவார்த்தை நிலையிலிருந்து படம் அடுத்தகட்டத்துக்கு இன்னும் நகரவில்லை. அதனால் வேறு படம் இயக்கும் முடிவுக்கு மணிரத்னம் வந்துள்ளதாக அவரது அலுவலக வட்டாரம் தெரிவிக்கின்றது.
 
இந்த புதிய படத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 
நாகார்ஜுன், மகேஷ்பாபுவை வைத்து மணிரத்னம் இயக்கயிருப்பதாக சொல்லப்பட்ட படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறாரா இல்லை, துல்கர் சல்மானை வைத்து புதிய படத்தை மணிரத்னம் இயக்குகிறாரா? 
 
இதற்கான பதில் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil