Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவு!

Mahendran
திங்கள், 30 செப்டம்பர் 2024 (17:46 IST)
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த இயக்குனர் மோகன் ஜி, பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்திருப்பதாக கருத்து தெரிவித்ததை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். ஆனால் உடனடியாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக வதந்தி பரப்பிய இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

'வாய்ச்சொல் வீரராக இல்லாமல், எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும்' என்று கூறிய நீதிபதி, சமூக வலைதளத்தில் இயக்குனர் மோகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மேலும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் தமிழ்நாடு முழுவதும் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments