எதை கேட்டாலும் வெட்கத்தையே பதிலாக தருகிறாயே... வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
காதலர்கள் மத்தியிலும், கவிஞர்கள் மத்தியிலும் பிரபலமான கவிதை வரிகள் இவை. எழுதியவர் தபூசங்கர். அவரது கவிதை புத்தகத்தின் தலைப்பே, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்.
திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிவந்த தபூசங்கர் முதல் முறையாக படம் ஒன்றை இயக்குகிறார். லைலா மஜ்னு விளையாட்டு என்று படத்துக்கு முதலில் பெயர் வைத்திருந்தனர். தற்போது அதை மாற்றி, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்று அவரது கவிதை வரியையே தலைப்பாக வைத்திருக்கிறார்.
தபூசங்கரின் முதல் படம் இன்று படப்பிடிப்புடன் தொடங்குகிறது. தான் கவிஞராக இருந்தாலும், தனது படத்தில் பாடல்கள் எழுதும் பொறுப்பை தனது கவிதை நண்பர்கள் பழனிபாரதி, யுகபாரதி மற்றும் ஏக்நாத்துக்கு பிரித்து கொடுத்திருக்கிறார். பாடல்களையும் நானே எழுதுவேன் என்று அடம்பிடிக்கும் இயக்குனர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
டி.இமான் இசை. குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் நடித்த ராமகிருஷ்ணன் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.