Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஞ்சா கருப்பின் தனி ட்ராக்

Advertiesment
கஞ்சா கருப்பின் தனி ட்ராக்
, செவ்வாய், 5 மே 2009 (16:06 IST)
பிதாமகனில் வெள்ளந்தியாக அறிமுகமான கஞ்சா கருப்பு இப்போது நாலும் தெரிஞ்ச விவரமான ஆளு. பிழைக்கிற ூட்டில் பிக்கப்பாகி வருகிறவர் அடுத்தக் கட்டத்துக்கு தாவியிருக்கிறார்.

இவர் நடிக்கும் படங்களில் ஒன்று காதல் மெய்ப்பட. துவாரகமாயி சினி புரொடகசன் பார்த்து படிங்க பல் சுளுக்கிடப் போகுது - படத்தை தயாரிக்கிறது. இயக்கம் ரவி ஆச்சாரியா. படத்தின் நகைச்சுவை பகுதியை தனியாக கையாளுகிறார் கஞ்சா கருப்பு. இவரது காமெடி போரஷன் படத்தில் தனி ட்ராக்காக வருகிறது.

இன்றைய தேதியில் தனி காமெடி ட்ராக் அமைக்கும் அளவுக்கு பிரபலமாக இருப்பவர்கள் இரண்டே பேர். வடிவேலு, விவேக். மூ‌ன்றாவதாக இப்போது கஞ்சா கருப்பு. காதல் மெய்ப்பட ஒர்க்அவுட்டானால் கஞ்சா கருப்பின் தனியாவர்த்தனம் தொடர்கதையாகலாம்.

காதல் கதையான இதில் விஷ்ணுப்ரியன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மதுமிதா. திருமணத்துக்குப் பிறகும் மதுமிதா நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

Share this Story:

Follow Webdunia tamil