Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

“கமல் சார் எனக்கு என்ன கொடுத்தார்” … விஜய் சேதுபதி சொன்ன ‘நச்’ பதில்!

Advertiesment
Vijay sethupathi reply to press about kamal gift to him
, வெள்ளி, 17 ஜூன் 2022 (17:11 IST)
விக்ரம் படம் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

விக்ரம் திரைப்படம் படக்குழுவினரே எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக மட்டும் 300 கோடி ரூபாய் வசூலிக்கும் என சொல்லப்படுகிறது. இந்த வெற்றி நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசனை உற்சாகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் இயக்குனர் லோகேஷ்க்கு புதிய கார் ஒன்றையும், நடிகர் சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோல்கஸ் கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார். அதுமட்டுமில்லாமல் லோகேஷின் உதவியாளர்களுக்கு 13 மோட்டார் சைக்கிள்களை பரிசாக அளித்தார்.

இந்நிலையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம் “படத்தின் வெற்றிக்கு உங்கள் சந்தனத்தின் கதாபாத்திரமும் முக்கியக் காரணம். உங்களுக்கு கமல் சார் என்ன பரிசு கொடுத்தார்?” என்ற கேள்வியை ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் சேதுபதி “அவரோடு நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அது எவ்ளோ பெரிய விஷயம். நான் வாழ்நாளில் அதை கற்பனை கூட பண்ணியதில்லை.” என்று தன் பாணியில் பதிலளித்தார். முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்திடமும் இதே கேள்வியை கேட்ட போது அவரும் “விக்ரம் படம் கொடுத்தார்” என பதிலளித்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யா- முத்தையா படம் ஆரம்பிக்கும் முன்பே தொடங்கிய வியாபாரம்