Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் சொன்னதைதான் பிரதமரும் இப்போது சொல்கிறார்… கிச்சா சுதீப் கருத்து!

Advertiesment
Kicha sudeep quoted pm modi speech
, சனி, 21 மே 2022 (10:09 IST)
நடிகர் கிச்சா சுதீப் சில நாட்களுக்கு முன்னதாக இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கின.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப், பேன் இந்தியா திரைப்படங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இனி இந்தி தேசிய மொழி இல்லை என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் “இந்தி தேசிய மொழி இல்லை எனில் ஏன் உங்கள் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்.” என வாக்குவாதம் செய்யும் விதமாக கேட்டிருந்தார்.

இதற்கு கிச்சா சுதீப் ஒரு பக்கம் பதிலளிக்க, இணையத்தில் தென்னிந்திய ரசிகர்கள் அஜய் தேவ்கனைக் கடுமையாக விமர்சித்தும், அவரின் முட்டாள்தனமாக கருத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி”இந்திய மாநிலங்கள் அனைத்தின் மொழியும் நமது அடையாளம்தான். சமீபகாலமாக சிலர் மொழியை வைத்து பிரச்சனையக் கிளப்ப பார்க்கிறார்கள்” என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து பிரதமரின் இந்த கருத்தைப் பகிர்ந்துள்ள கிச்சா சுதீப் “நான் சொன்னதைதான் இப்போது பிரதமரும் பிரதிபலிக்கிறார்” என்று கூறியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ ஷூட்டிங் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!