Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவையான பிரட் அல்வா செய்ய...!!

சுவையான பிரட் அல்வா செய்ய...!!
தேவையான பொருட்கள்:
 
மில்க் பிரட் - 10 துண்டுகள்
பாதாம் - 15
முந்திரி - 15
ஏலக்காய் - 5
நெய் - அரை கப்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்

செய்முறை:
 
* பிரட் துண்டுகளின் ஓரங்களில் வெட்டி விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும்,  பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
* அடுத்து உதிர்த்த பிரட் துண்டுகளை நெய்யில் போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க  விடவும்.
 
* பாலானது நன்கு கொதிக்கும் போது அதில் சர்க்கரையை போடவும். சர்க்கரை கரையும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமில் 4 துண்டுகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதமுள்ளவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
 
* அரைத்த பேஸ்ட்டை கொதிக்கும் பாலில் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு வறுத்து வைத்துள்ள பிரட் தூளை நெய்யுடன்  பாலில் சேர்த்து, தீயை குறைவிலேயே வைத்து, 10 நிமிடம் வேக வைக்கவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
* இதற்குள் பாலானது வற்றி, அல்வா போன்று வந்துவிடும். இப்போது ஓரங்களில் நெய் விட ஆரம்பிக்கும். பின்னர் இதன் மேல் பாதாம் மற்றும் முந்திரியால்  அலங்கரிக்கவும். இப்போது சுவையான பிரட் அல்வா தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொத்தமல்லி தழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன...?