Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பலகாரம் பாதாம் பர்ஃபி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பாதாம் - 1 1/2 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 100 மில்லி
குங்குமப்பூ - அலங்கரிக்க
பாதாம், பிஸ்தா - அலங்கரிக்க
செய்முறை:
 
பாதாமை சிறிது நேரம் நீரில் ஊற வைத்து தோலை உரித்து கொள்ளவும். தோல் நீக்கிய பாதாமை வாணலியில் ஈரம் போக லேசாக வறுத்து  பொடி செய்துக்கொள்ள வேண்டும்.
 
சர்க்கரையில் தண்ணீர் சேர்த்து நான்ஸ்டிக் வாணலியில் கொதிக்க விடவேண்டும். சர்க்கரை நன்கு கரைந்தவுடன் ஏலக்காய் பொடி சேர்த்து பாதாம் பொடியையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
 
பாதாம் கலவை நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் சேர்ந்தும் வரும் வரையில் கைவிடால் கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய பின் அதை நன்கு வெடிப்புகள் இல்லாமல் பிசைந்துக்கொள்ள வேண்டும்.
 
பிசைந்த மாவு பட்டர் பேப்பர் அல்லது நெய் தடவிய தட்டில் பரப்பி மேலே பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூவை தூவி துண்டுகள்  போடவும். சுவையான பாதாம் பர்ஃபி தயார்.

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments