பல நோய்களுக்கு மருந்தாகும் ஆப்ரிகாட் பழங்கள் - அறிவோம்!
, திங்கள், 30 டிசம்பர் 2013 (16:03 IST)
அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits - தமிழில் சர்க்கரை பாதாமி என்று அறியப்படுகிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன.
இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.தோல் நோய்களை நீக்கும்:இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்தவல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
நரம்புகளை வலுப்படுத்தும்:பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது.