Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவை பார்த்து யாரும் கெட்டுப்போவதில்லை - விஜய் சேதுபதி அதிரடி

சினிமாவை பார்த்து யாரும் கெட்டுபோவதில்லை - விஜய் சேதுபதி அதிரடி

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:41 IST)
இயல்பான நடிப்பின் மூலமாகவும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தும் பல ரசிகர்களை பெற்றிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.


 

 
நாட்டில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புகளுக்கு சினிமாதான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதை விஜய் சேதுபதி மறுத்துள்ளார். 
 
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் “சினிமாவை பார்த்து யாரும் கெட்டுப் போவதில்லை. காதல் பிரச்சனை தொடர்பாக நிகழும் கொலைகள், சினிமாவின் பாதிப்பிலிருந்துதான் நடக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் மனதில் ஏற்கனவே கெட்ட எண்ணங்கள் இருந்திருக்க வேண்டும். 
 
அதனால் தான் அவர்கள் கொலை செய்கிறார்களே தவிர, சினிமாவை பார்த்து யாரும் சீரழிவதில்லை. ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments