Publish Date: Mon, 11 Oct 2021 (08:55 IST)
Updated Date: Mon, 11 Oct 2021 (08:56 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கிடைத்துள்ளதை அடுத்து திரையரங்குகளில் கூட்டம் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 2-வது நாளில் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு நாளிலும் சேர்ந்து சுமார் 16 கோடி வசூல் செய்ததாகவும் கடந்த சில மாதங்களில் இது போன்ற வெற்றிப் படம் தமிழில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது யாகி உள்ளது