"தலைவி" ஜெயலலிதா வாழ்வின் நல்ல தருணங்களை சொல்லும் - மதன் கார்கி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (21:14 IST)
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு, இன்று  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்கி...
 
முதலில் கங்கனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தேசிய விருது பெற்றிருக்கிறார். அடுத்த வருடம் இப்படத்திற்காகவும் விருதை பெற வாழ்த்துக்கள். பாடலாசியராக மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் பட உருவாக்கத்திலும் பணிபுரிந்தது புது அனுபவமாக இருந்தது. இப்படத்தின் திரைக்கதைக்காக விஜயேந்திர பிரசாத் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். 
 
திரைக்கதை பற்றிய அவரது பார்வை, நிறைய கற்று தந்தது. இந்த மாதிரி கதைகள் செய்யும்போது எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும் ஆனால் இயக்குநர் விஜய் தெளிவாக இருந்தார். ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் நல்ல தருணங்களை சொல்லப் போகிறோம் என்றார். கங்கனா இப்படத்தில் மிகப்பெரும் பணியை செய்துள்ளார். 
 
எல்லோருக்கும் அவர் இந்த பாத்திரத்தை செய்ய முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படம் பார்த்த போது  அந்த தடைகள் அனைத்தையும் உடைத்து மிக சிறப்பாக செய்துள்ளார். அரவிந்த் சாமி இப்படத்திற்காக மிகப்பெரும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் ஒவ்வொருவருமே கடுமையான உழைப்பை தந்துள்ளார்கள். படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. உதயநிதி முன் அறிமுக நிகழ்ச்சி..!

16 வருடங்களுக்கு பின் உருவாகும் '3 இடியட்ஸ் 2'.. அமீர்கான், கரீனா கபூர், மாதவன் நடிக்கிறார்களா?

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments