Publish Date: Tue, 31 Jan 2017 (13:19 IST)
Updated Date: Tue, 31 Jan 2017 (13:22 IST)
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ் வழியாக இப்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் ஓவியா. சீனி படத்துக்காக சென்னை வந்தவரிடம் பேசியதிலிருந்து...
உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...?
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கேரளாவிலுள்ள திருச்சூர். பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் போதே மாடலிங் செய்திருக்கேன். அப்படிதான் நடிக்க வாய்ப்பு வந்தது.
உங்க முதல் படம் களவாணியா?
இல்லை. மலையாளத்தில் 3 படங்களில் நடித்த பிறகே களவாணியில் வாய்ப்பு கிடைத்தது. நான் 2007 -லேயே நடிக்க ஆரம்பித்தேன். 2010 -இல்தான் களவாணியில் நடித்தேன்.
உங்கள் இயற்பெயரே ஓவியாதானா?
இல்லை. பெற்றோர் வைத்த பெயர், ஹெலன். சற்குணம்தான் சினிமாவுக்காக ஓவியாங்கிற பெயரை வைத்தார். அதுவே பிரபலமாகிவிட்டது.
யாமிருக்க பயமேன், ஹலோ நான் பேய் பேசுகிறேன்னு தொடர்ச்சியா பேய் படங்களில் நடித்தீர்களே... பேய்க்கு பயப்படுவீர்களா?
இல்லாத ஒரு விஷயத்துக்கு ஏன் பயப்படணும்? பயம் இல்லாமதான் இந்தப் படங்களில் நடித்தேன்.
நடிப்பு தவிர உங்க ஹாபி என்ன?
மாடலிங் பண்ணணுங்கிறது என்னோட ஆசை. அதேபோல நிறைய படிக்கணுங்கிற விருப்பமும் உண்டு.
தப்பு செய்து மாட்டிக் கொண்ட அனுபவம் உண்டா?
பத்தாவது படிக்கும் போது ப்ராக்ரஸ் கார்டில் அப்பாவின் கையெழுத்தை போட்டு மாட்டியிருக்கேன்.
தமிழில் உங்களை அதிகமாக பார்க்க முடியவில்லையே?
தமிழில் ஒரு படம் நடிக்கிறேன். தவிர கன்னடம், தெலுங்கிலும் ஒவ்வொரு படம் நடிக்கிறேன். இந்த வருடம் நிறைய தமிழ்ப் படங்களில் என்னை நீங்க எதிர்பார்க்கலாம்.