Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அந்த ரகசியத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் - ஹ்ரித்திக் ரோஷன் பேட்டி!

விஜய்யின் அந்த ரகசியத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும் - ஹ்ரித்திக் ரோஷன் பேட்டி!
, புதன், 4 மார்ச் 2020 (12:23 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு உலகப்புகழ் பெற்ற நடிகர் விஜய். நடிப்பு , டான்ஸ் , ரொமான்ஸ் , செண்டிமெண்ட் , ஆக்ஷன், டைமிங் கவுண்டர் என அத்தனையும் அசால்டாக செய்பவர் விஜய். இதனாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அத்தனை பேரும் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

ஏன் இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால் சினிமா பிரபலங்களே விஜய்யின் தீவிர ரசிகராக இருப்பதெல்லாம் பார்க்கமுடிகிறது. அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நேற்று சென்னையில் ராடோ கடிகாரம் விளம்பரத்துக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை குறித்து பேசிய அவரிடம் தொகுப்பாளர் நடிகர் விஜய்யின் நடனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர்,

நடிகர் விஜய்யின் நடனத்தை பற்றி நான் பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எப்படி இவ்வளவு எனர்ஜியோடு நடனமாடுகிறார் எனவும் நடனமாடுவதற்கு முன் எந்த மாதிரியான உணவை உட்கொள்கிறார் என்ற ரகசியத்தை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளது என கூறினார். நடிப்பிலும் , அழகிலும் உலகப்புகழ் பெற்ற ரித்திக் ரோஷன் விஜய் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரலட்சுமியின் டெரர் நடிப்பில் "வெல்வட் நகரம்" படத்தின் திகில் காட்சி ..!