இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் - பிரபுதேவா பேட்டி
இனிமேல் தொடர்ந்து நடிப்பேன் - பிரபுதேவா பேட்டி
Publish Date: Fri, 30 Sep 2016 (17:50 IST)
Updated Date: Fri, 30 Sep 2016 (18:00 IST)
பல வருட இடைவெளிக்குப் பிறகு தேவி படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிகராகியிருக்கிறார் பிரபுதேவா. படம் குறித்த அவரது பேச்சு உங்களுக்காக..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறீர்கள்...?
நான் தமிழ் படங்களில் நடித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது தேவி படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். ரசிகர்கள் முன்பு போலவே வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு நடிகை கொலை செய்யப்பட்டார். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தேவி படம் தயாராகி உள்ளது.
தமன்னாவுக்கு இதில் என்ன கதாபாத்திரம்?
தமன்னா கிராமத்து பெண்ணாகவும் நகரத்து பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார்.
சோனுசூட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாடல்கள், மற்றும் உங்கள் நடனம்...?
படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் காட்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எனது நடனம் இருக்கும்.
படத்தின் கதை நடக்கும் பகுதி மும்பையா...?
கோவை பின்னணியில் இந்த கதையை உருவாக்கி உள்ளோம்.
இது பேய் படம் என்பது உண்மையா?
திகில் படமாக தயாராகி உள்ளது. பேய் போன்ற அமானுஷ்ய விஷயங்களையும் படத்தில் பார்க்கலாம். ஆனால் முழு பேய் படமாக இருக்காது. பயமுறுத்துவது போன்ற காட்சிகளும் இல்லை.
போகன் படம் எப்போது வெளியாகும்?
படம் முடிந்துவிட்டது. பார்த்தேன், நன்றாக வந்திருக்கிறது. டிசம்பரில் படம் வெளிவரும்.