தெகிடிங்கிறது சூது சார்ந்த விளையாட்டு - இயக்குனர் பி.ரமேஷ்
, சனி, 8 பிப்ரவரி 2014 (12:44 IST)
சி.வி.குமாரின் தயாரிப்பு என்றால் தைரியமாக பார்க்கலாம் என்ற நம்பிக்கையை அவரின் கடந்தப் படங்கள் உருவாக்கியிருக்கின்றன. அந்த நம்பிக்கையை அதிகரிப்பதற்கான எல்லா தடயங்களும் தெகிடியில் உள்ளது. முந்தைய சில படங்களைப் போலவே குறும்படத்திலிருந்தே இப்படத்தின் இயக்குனர் ரமேஷை கண்டெடுத்திருக்கிறார் சி.வி.குமார். சினிமாக்காரர்களுக்குரிய உயர்வுநவிர்ச்சி இல்லாத ரமேஷின் பேச்சு படம் மீதான நம்பிக்கையை வலுவூட்டுகிறது.
தெகிடி அப்படீன்னா...?தெகிடி அப்படிங்கிறது தமிழ்ப் பெயர், தமிழ் வார்த்தை. தமிழ் அகராதியில் பார்த்தோம்னா தெரியும். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு டைட்டில் தேடும்போது பகடை உள்பட பல பெயர்களை பரிசீலத்தோம். ஆனா இது விளையாட்டு சார்ந்த படம் கிடையாது. இந்தப் படத்தின் லீட் கேரக்டர் வெற்றியை சுற்றி நடக்கிற விஷயங்கள், அதை அவர் எப்படி ஹேண்டில் பண்றாரு அப்படிங்கிறதால தெகிடிங்கிற பெயரை தேர்வு செய்தோம். தெகிடிங்கிறது சூது சார்ந்த விளையாட்டை குறிக்கிற சொல். பகடை, தாயம் அதுமாதிரி.
தெகிடிக்கு புரட்டு என்றும் அர்த்தம் இருக்கே...?ஆமா, அதுமாதிரி நிறைய அர்த்தம் இருக்கு. புரட்டு, ஃப்ராட் அப்படி நிறைய அர்த்தம் இருக்கு. ஸோ இந்தப் படத்துல நீங்க தெகிடி யார் அப்படிங்கிறதையும் பார்க்கலாம். இந்த டைட்டில் படத்துக்கு எவ்வளவு ஆப்டானதுங்கிறதை நீங்க படம் பார்க்கும் போது தெரிஞ்சிடும்.