Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓஜா அபாரம்! இந்தியா வெற்றி

ஓஜா அபாரம்! இந்தியா வெற்றி
ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் முதல் போட்டியில் இந்தியா வங்கதேச அணியை 25 ரன்களில் வீழ்த்தியது. பேட்டிங்கில் யுவ்ராஜ் அதிரடியால் ஸ்கோரை உயர்க்த பந்து வீச்சில் பிராக்யன் ஓஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

180 ரன்கள் இலக்கை எதிர்த்து வங்கதேசம் தன் 20 ஓவர்களில் 155 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

180 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய தமீம் இக்பால், ஜுனைதின் சித்திக் ஆகியோர் முதல் இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் என்று துவங்கினர்.

ஜாகீர் கான் 2 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்தார். அடுத்ததாக இர்ஃபான் பத்தானும் 2 ஓவர்களில் 20 ரன்களைக் கொடுத்தார்.

ஆனால் யூசுஃப் பத்தான் பந்து வீசcஅ அழைக்கப்பட்டதும் அபாய வீரர் தமீம் இக்பால் 15 ரன்களில் தோனியிடம் ஸ்டம்ப்டு ஆனார்.

ஆனால் அதன் பிறகு ஜுனைதின் சித்திக் சில அதிரடி பவுண்டரிகளியும் 3 சிக்சர்களையும் அடித்தார். அஷ்ரஃபுல் அபாரமான பவுண்டரியை அடித்து 11 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மாவின் பந்தை தேவையில்லாமல் நகர்ந்து கொண்டு அடிக்க முயல கவர் திசையில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த அபாய வீரர் ஷாகிப் அல் ஹஸன் 8 ரன்கள் எடுப்பதற்குள் ஜுனைத் சித்திக் மேலும் இரண்டு பவுண்டரிஅகளை அடித்து 8 ஓவர்கள் முடிவில் அணியின் எண்ணிக்கையை 74 ரன்களாக உயர்த்தினார்.

அது வரை வங்கதேசம் இந்தியாவை இன்று வென்று விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் பிராக்யன் ஓஜா பந்து வீச அழைக்கப்பட்டவுடன் ஒரே ஓவரில் ஷாகிபையும், மஹ்முதுல்லாவையும் வீழ்த்தினார். 74/2 என்ற நிலையிலிருந்து வங்கதேசம் 95/5 என்று சரிந்தது. அதன் பிறகு மீளவில்லை.

ஜுனைத் சித்திக் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவுடன் வங்கதேசத்தின் வெற்றிக் கனவு நிறைவேறாமல் போனது.

ஓஜா 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

கடைசியாக நயீம் இஸ்லாம் இர்ஃபான் பத்தானை ஒரு சிக்சரும், இஷாந் ஷர்மாவை 2 சிக்சர்களும் அடித்து 28 ரன்கள் எடுத்தார். ஆனால் ஆட்டம் நீண்ட நேரம் முன்னதாகவே இந்திஆவின் பக்கம் வந்ததால் இந்த அதிரடி ஒரு போனஸாக மட்டுமே முடிந்து போனது.

இந்த வெற்றி மூலம் இந்தியா 2 புள்ளிகளை பெற்றது.


Share this Story:

Follow Webdunia tamil