பூபதி-போபண்ணா பாரீஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்
, திங்கள், 5 நவம்பர் 2012 (12:46 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, 7-ம் நிலை ஜோடியான பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வென்று பட்டம் வென்றது.1
மணிநேரம் 24 நிமிடங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த போட்டியில் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி 7- 6 (6), 6- 3 என்ற நேர் செட்டுகளில் பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வெற்றிக்கொண்டது.இந்த சீசனில் நான்கு இறுதிப்போட்டிகளுக்கு இந்த ஜோடி தேர்வானது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துபாய் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற பூபதி-போபண்ணா ஜோடி, தற்போது இரண்டாவதாக பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளது.ஏற்கனவே, இந்த வருடம் நடைபெற்ற ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் மற்றும் ஷாங்காய் ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் தொடர்களில் பூபதி-போபண்ணா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.