Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் பதக்கமா? உறுதி‌யி‌ல்லை எ‌ன்‌கிறா‌ர் சானியா

ஒ‌லி‌ம்‌பி‌க்‌கி‌ல் பதக்கமா? உறுதி‌யி‌ல்லை எ‌ன்‌கிறா‌ர் சானியா
, சனி, 14 ஜூலை 2012 (09:27 IST)
''ல‌ண்ட‌ன் ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டி‌யி‌ல் பதக்கம் வெல்வோம் என்று எந்த உறுதிமொழியும் அளிக்க முடியாது'' எ‌ன்று இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையரில் லியாண்டர் பயசுடனும், பெண்கள் இரட்டையரில் ருஷ்மி சக்ரவர்த்தியுடனும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இணைந்து விளையாடுகிறார்.

மும்பையில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சானியாவிடம், ஒலிம்பிக்கில் டென்னிசில் எத்தனை பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கேட்ட போது `எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து கூறுவது நியாயமற்றது எ‌ன்றா‌ர்.

அனைத்து வீரர், வீராங்கனைகளும் நெருக்கடியுடன் தான் ஒலிம்பிக்குக்கு போகிறார்கள் எ‌ன்று கூ‌றிய சா‌னியா, எனவே பதக்கம் வெல்வோம் என்று எந்த உறுதிமொழியும் அளிக்க முடியாது. ஆனால் எங்களது 100 சதவீத திறமையை வெளிப்படுத்துவோம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil