தாய்லாந்தில் நடைபெற்ற பட்டாயா ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் சானியா மிர்சா - ஆஸ்ட்ரேலியாவின் அனஸ்டாசியா ரோடினோவோ இணை வென்றது.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தைபே இணையான சான் - யுங் ஜா இணையை 3-6, 6-1, 10-8 என்ற செட்கள் கணக்கில் போராடி வென்றது.
ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஹாண்டுசோவா, கிர்லென்கோவாவை 6-7 4-7), 6-3, 6-3 என்ற செட்கள் கணக்கில் வென்று பட்டத்தை வென்றார்.