மாஸ்கோவில் நடைபெறும் தால் நினைவு செஸ் தொடரில் தொடர்ந்து 6வது ஆட்டத்தையும் உலக சாம்பியன் ஆனந்த் டிரா செய்தார்.
நீண்டகாலமாக ஆனந்த் மோதி வரும் உக்ரைன் வீரர் இவான்சுக்கிடம் டிரா செய்தார் ஆனந்த்.
கறுப்புக் காய்களுடன் விளையாடிய ஆனந்த் இவான்சுக்கின் அபார ஆட்டத்திற்கு முன்னால் டிரா செய்ததே பெரிய விஷயமாகப் போய்விட்டது.
இவான்சுக்கின் நகர்த்தல்கள் தோற்றத்தில் ஆபத்தற்றவையாகத் தெரிந்தாலும் எதிராளி தவறு செய்தால் புகுந்து விடும் திறமையுடையவர் இவான்சுக் என்று ஆனந்த் ஆட்டம் முடிந்தவுடன் தெரிவித்தார்.
பில்போ செஸ் தொடரில் இதுபோன்று ஆடி என்னை தோற்கடித்தார் இவான்சுக் அதனால் இன்று நான் எச்சரிக்கையாக இருந்தேன் என்றார் ஆனந்த்.