Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

T20 சாம்பியன்ஸ் லீக்: சோமர்செட் அணிக்கு பரபரப்பு வெற்றி

Advertiesment
T20 கிரிக்கெட்
, புதன், 21 செப்டம்பர் 2011 (12:30 IST)
ஹைதராபாத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பிரிவு பி-யில் நேற்று நியூஸீலாந்து அணியான ஆக்லாந்து ஏசஸ் அணியை இங்கிலாந்தின் சோமர்செட் அணி பரபராப்பான முறையில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இரண்டு போட்டிகளிலும் தோல்வி தழுவிய ஆக்லாந்து ஏசஸ் அணி சாம்பியன் லீக் T20 பிரதான போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட் செய்த ஆக்லாந்து ஏசஸ் அணி 125 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் லூ வின்சென்ட் அதிகபட்சமாக 47 பந்துகளில் 47 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

இவருக்கு 'ஸ்டான்ட்' கொடுக்க எதிர்முனையில் ஆளில்லை. ஹாப்கின்ஸ் 22 ரன்களையும் கடைசி வீரர் ஆடம்ஸ் 13 ரன்களையும் அடிக்க மற்றோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

எளிதான இலக்கென்று களமிறங்கிய சோமர்செட் அணி ஜேம்ஸ் ஹில்ட்ரெத், ஆட்ட நாயகன் ஸ்டீவ் ஸ்னெல் ஆகியோரின் 61 ரன்கள் 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பால் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. ஹில்ட்ரெத் ரன் அவுட் ஆகா கடைசி பந்தில் ஒரு ரன் தேவை நிலை இருந்தது. ஆனால் சோமர்செட் கேப்டன் அல்ஃபான்சோ தாமஸ் கவர் திசையில் ஒரு ரன் எடுத்து வெற்றிபெறச் செய்தார்.

52/1 என்று இருந்த சோமர்செட் கடைசியில் ஆக்லாந்து பந்து வீச்சாளர் பேட்ஸின் அபார பந்து வீச்சு காரணமாக 64/5 என்று மடிந்தது. ட்ரீகோ, மற்றும் காம்ப்டன் விக்கெட்டுகளை பேட்ஸ் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பை பெற்றார். ஆனால் ஹேட்ரிக் கிடைக்கவில்லை.

இன்று லீஷயர் அணிக்கும் இலங்கையின் ருஹுனா அணிக்கும் இடையே மற்றொரு தகுதிச் சுற்றுப்போட்டி மாலை 4 மணிக்கும், இந்தியாவின் கொல்கட்டா நைட் ரைடர்ஸ், சோமர்செட் அணிகள் இரவு 8 மணிக்கும் மோதுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil