Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க ஓபன்: சானியா மிர்சா முதல் சுற்றில் தோல்வி

Advertiesment
அமெரிக்க ஓபன்: சானியா மிர்சா முதல் சுற்றில் தோல்வி
, புதன், 31 ஆகஸ்ட் 2011 (19:26 IST)
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா முதல் சுற்றிலேயே தோல்வி தழுவி வெளியேறினார்.

இஸ்ரேல் வீராங்கனையும், சானியாவின் முந்தைய இரட்டையர் டென்னிஸ் ஜோடியுமான ஷாஹர் பியர், சானியா மிர்சாவை 6- 7, 6- 3, 6- 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சானியாவின் பலவீனமான சர்வே இன்றும் வீழ்ச்சிக்குக் காரணமானது. சானியாவின் சர்வ்களை 7 முறை பியர் முறியடித்தார். மேலும் சானியா மிர்சா 9 டபுள் பால்ட்களையும், 49 முறை ஆட்டத்தில் தவறுகளையும் செய்தார்.

ஆனால் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஜோடியும், ரோஹண் போபண்ணா மற்றும் அவரது பாகிஸ்தானிய ஜோடியுமான குரேஷியும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil