இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் பரம்பரை வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட் அணியும் ஆர்சனெல் அணியும் மோதின. இதில் ஆர்செனல் அணியை 8- 2 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது மான்செஸ்டர் யுனைடெட்.
மான்செஸ்டர் அணியின் வெய்ன் ரூனி ஹாட்ரிக் சாதானி புரிந்தார். ரூனி இரண்டு ஃப்ரீ கிக் மற்றும் ஒரு பெனால்டி ஷாட்டில் 3 கோல்களை அடுத்தடுத்து அடித்து ஹாட்ரிக் எடுத்தார்.
ஆர்செனல் அணிக்கு தியோ வால்காட், ராபின் வான் பெர்சி ஆகியோர் ஆறுதல் கோல்களை அடித்தனர்.
பிரிமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் அனைத்துப் போட்டிகளையும் இதுவரை வென்ற மான்செஸ்டர் யுனைடெட் முதலிடத்தில் உள்ளது. ஆர்செனல் அணிக்கு இதுவரை ஒரேயொரு புள்ள்ளி மட்டுமே கிடைத்துள்ளது.
மேலும் 3 போட்டிகளிலும் அந்த அணியின் வீரர்களில் ஒருவருக்கு சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
நேற்று ஆர்செனல் அணி வீரர் கார்ல் ஜென்கின்சன் சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.