பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை ஆணைய மையத்தில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு இருந்த விளையாட்டு வீரர்கள் சிலரின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்க்டுச் சென்றனர்.
ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான 6 வீராங்கனைகள் தடை செய்யப்படலாம் என்ற நிலையில் இன்று பெங்களூரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாக்டர் வி.ஜெயராமன் என்பாரது தலைமையில் சென்ற இந்தக் குழு அங்கு பயிற்சியில் இருந்த வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை சோதனைக்கு எதுத்துக் கொண்டதோடு, அங்கு வரும் மருந்துகளையும் பரிசோதனை செய்தனர்.
ஊக்க மருந்து விவகாரம் தொடர்பாக இந்திய தடகளப்பயிற்சியாளர் யூரி நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.