Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி

Advertiesment
ஃபெடரர், நடால் காலிறுதிக்குத் தகுதி
, செவ்வாய், 28 ஜூன் 2011 (12:13 IST)
விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீரர் மைக்கேல் யூஸ்னியை ரோஜர் ஃபெடரர் 6- 7, 6- 3, 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தார்.

முதல் செட்டை நன்றாக விளையாடியும் ரோஜர் ஃபெடரர் டை பிரேக்கரில் இழந்தார். அடுத்ததாக காலிறுதியில் பிரான்ஸ் வீரர் வில்ஃபிரெட் சொங்கவைச் சந்திக்கிறார் ரோஜர் ஃபெடரர்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரர் ரஃபேல் நடால், 24ஆம் தரநிலையில் உள்ள அர்ஜென்டீனாவின் டெல் போட்ரோவை 7- 6, 3- 6, 7- 6, 6- 4 என்ற செட்களில் போராடியே வீழ்த்தினார்.

முதல் செட்டில் பெடரர் டை பிரேக் வரை செல்லக் காரணம் அவரது சில மோசமான ஷாட்களே. இதனல் டை பிரேக்கரிலும் யூஸ்னி 7- 5 என்று வெற்றி பெற நேர்ந்தது.

ஆனால் அதன் பிறகு ஃபெடரர் விழித்துக் கொண்டர். அபாரமாக சில ஷாட்களை ஆடாமல் விட்டார், அபூர்வமான வாலிகள், டிராப் ஷாட்கள், பேஸ்லைனிலிருந்து அபாரமான பேக் ஹேண்ட் ஷாட்கள் என்று அசத்தினார் ஃபெடரர்.

மற்றொரு ஆட்டத்தில் டெல்போர்ட்ரொ சரியான சவாலைக் கொடுத்தார். நடாலை இரு முறை டை பிரேக்கருக்கு இழுத்தார் ஆனாலும் முதல் முறை 8- 6, என்றும் இரண்டாம் முறை 7- 4 என்றும் போராடியே நடாலால் அந்த ஆட்டங்களை வெல்ல முடிந்தது.

இந்த இரண்டு டைபிரேக்கர்களையும் அவர் வென்றிருந்தால் நடால் பாடு திண்டாட்டமாகியிருக்கும். ஆனால் நடால் விடவில்லை. அந்த முக்கியக் கட்டங்களில் டெல் போட்ரோ டபுள் பால்ட்களையும், தவறுகளையும் செய்து தோல்வி தழுவினார்.

Share this Story:

Follow Webdunia tamil