Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராடி வென்றா‌ர் வீனஸ்

Advertiesment
போராடி வென்றா‌ர் வீனஸ்
, புதன், 22 ஜூன் 2011 (21:06 IST)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 2வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (6-8), 6-3, 8-6 எ‌ன்ற செ‌ட் கண‌க்‌கி‌ல் போராடி வெற்றி பெற்றார்.

2வது சு‌ற்‌றி‌ல் ஜப்பான் வீராங்கனை கிமிகோ டேட் குருமை எதிர்கொண்ட வீனஸ் முதல் செட்டில் 0-3 என்று பின்தங்கினார். அதன்பிறகு சிறப்பாக விளையாடி டை-பிரேக்கர் வரை வந்தார். ஆனால் கிமிகோவின் சிறப்பான ஆட்டத்தால் 6-8 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை இழந்தார் வீனஸ்.

ஆனால், 2வது செட்டில் வீனஸ் அபாரமாக விளையாடி 6-3 என்று கைப்பற்றினார்.

ஆனால், 3வது செட்டில் கடும் போட்டியாக அமைந்தார் கிமிகோ. இருவரும் தங்களது சர்வ்களை தக்கவைத்து 6-6 என்ற ஆட்டக்கணக்கிற்கு வந்தனர். இறுதி செட் என்பதால் டை-பிரேக்கர் கிடையாது. அதனால் ஆட்டம் தொடர்ந்தது.

வீனஸ் தனது சர்வை தக்கவைத்து 7-6 என்று முன்னேறினார். ஆனால், கிமிகோ தனது சர்வை தக்கவைக்கத் தவறினார். 3 மணி நேரம் நடந்த ஆட்டம், மேலும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 8-6 என்ற கணக்கில் வீனஸ் இறுதி செட்டை கைப்பற்றி 3வது சுற்றிற்கு முன்னேறினார்.

தரவரிசையில் இல்லாத கிமிகோவின் இன்றைய ஆட்டம் வீனஸிற்கு பெரும் சவாலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil