Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் சீரிஸ்: சாய்னா விலகல்

Advertiesment
சூப்பர் சீரிஸ்: சாய்னா விலகல்
, சனி, 25 டிசம்பர் 2010 (11:38 IST)
சீசன் இறுதி சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி தொடங்குகிறது. உலகத் தரவரிசையில் டாப்௮ வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இருந்து 2-ம் நிலை வீராங்கனை இந்தியாவின் சாய்னா நேவால் விலகி இருக்கிறார்.

சமீபத்தில் நடந்த ஹாங்காங் சூப்பர் சீரிஸ் இறுதி ஆட்டத்தின் போது சாய்னாவுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் சாய்னா, அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் முழு உடல்தகுதியை பெற்று விடும் நம்பிக்கையில் இரக்கிறார்.

இந்த நிலையில், மிகப்பெரிய தொடரான சூப்பர்சீரிஸ் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றால் அவருக்கு சுமார் ரூ.21/2 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.

காயத்துக்கு முறையான மருத்துவ சான்றிதழ் தரும்படி உலக பேட்மிண்டன் சம்மேளனம் சாய்னாவுக்கு கடிதம் எழுதி உள்ளது. தனது டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, மருத்துவ சான்றிதழை அனுப்புவேன் என்று சாய்னா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil