ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
தரநிலையில் 6-வதாக உள்ள சீன வீராங்கனை ஷுவாய் ஸாங் என்பவரை சானியா மிர்சா நேர் செட்களில் வீழ்த்தினார்.
சானியா மிர்சாவுக்கு தரநிலை வழங்கப்படவில்லை. இதனால் சானியா மிர்சா சீன வீராங்கனைக்கு அதிர்ச்சியளித்துள்ளார் என்றே கூறவேண்டும்.
சானியா மிர்சா முதல் செட்டில் சாங்கின் இரண்டு சர்வ்களை பிரேக் செய்து 6௨ என்று வெற்றி பெற்றார். பிறகு இரண்டாவது செட்டில் துவக்கத்திலேயே பிரேக் கொடுத்து போட்டியை வென்றார்.