பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் செர்பிய வீராங்கனை அனா இவானோவிக் வெற்றி பெற்றுள்ளார்.
ரோலான்ட் காரோஸில் இன்று நடந்த இப்போட்டியில், செக் குடியரசின் இவெட்டா பெனிஸோவாவுடன் மோதிய இவானோவிக், 6-0, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதில் முதல் செட்டை 23 நிமிடங்களில் கைப்பற்றிய இவானோவிக், அடுத்த செட்டைக் கைப்பற்ற 38 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு 3வது சுற்றுப்போட்டியில் போர்ச்சுகல் வீராங்கனை மிச்செல்லி டி-பிரிட்டோவுடன் மோதிய பிரான்ஸின் அரவனே ரெஸாய் 7-6 (7-3), 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.