பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேற்றியுள்ளார்.
ரோலண்ட் காரோஸில் இன்று நடந்த 2வது சுற்றுப்போட்டியில் 4ஆம் நிலை வீரரான ஜோகோவிச், உக்ரைன் வீரர் செர்ஜி சக்ஹோவ்ஸ்கியுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
வெற்றி பெற ஒரு செட்டைக் கைப்பற்றினால் போது என்ற நிலையில் விளையாடிய ஜோகோவிச், 3வது செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் மிக எளிதாக கைப்பற்றி, 3-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார்.