ரோம் நகரில் நடந்து வந்த மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ரஃபேல் நடால் 4வது முறையாக வென்றுள்ளார்.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக்கை எதிர்த்து விளையாடிய ஸ்பெயின் வீரர் நடால், 7-6(2), 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சமீபத்தில் நடந்த மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ், பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், தற்போது ரோம் மாஸ்டர்ஸ் தொடரையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.