உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் டினாரா சஃபினா ஸ்டட்கர்ட் டென்னிஸ் தொடர் ஒற்றையர் அரையிறுதியில் இத்தாலியின் ஃபிளாவியா பெனேட்டாவை வென்று இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், பெனேட்டாவை 3-6, 7-5, 6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சஃபினா.
இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை சந்திக்கிறார் டினாரா சஃபினா.