மெம்ஃபிஸில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் வென்றார். செக்.குடியரசு வீரர் ராடெக் ஸ்டெஃபானெக் என்பவரை 7- 5, 7- என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் ஆனார் ரோடிக்.
கடந்த வாரம் சான் ஜோஸில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் அரையிறுதியில் இதே ஸ்டெஃபானெக்கிடம் வீழ்ந்த ரோடிக் அந்த தோல்விக்கு இந்த வெற்றி மூலம் பழி தீர்த்தார்.
துவக்கம் முதலே சர்வ்களில் அபாரமாக திக்ழ்ந்த ரோடிக் முதல் செட்டில் எடுத்த எடுப்பிலேயே 3- 0 என்று முன்னிலை பெற்றார். பிறகு முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் இருவரும் தங்களது சர்வ்களை வெற்றி பெற்று வந்து ரோடிக் 6- 5 என்று முன்னிலை பெற்றிருந்த போது ஸ்டெஃபானெக்கின் சர்வை முறியடித்து பட்டம் வென்றார் ரோடிக்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகியை 6- 1, 6- 3 என்ற செட்களில் வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா சாம்பியன் பட்டம் வென்றார். அஸரென்கா வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.