சண்டிகரில் நடைபெறும் பஞ்சாப் தங்கக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
முன்னதாக மற்றொரு போட்டியில் ஹாலந்து அணி, ஜெர்மனியை
7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இறுதிப் போட்டி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், ஹாலந்தும் மோதுகின்றன.