மெல்போர்ன்: ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆடவர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்திய-செக்.குடியரசு இணையான லியாண்டர் பயஸ்-லூகாச் லூயி இணை தோல்வி தழுவியது.
சற்று முன் நடைபெற்ற ஆட்டத்தில் 2ஆம் தரவரிசையில் உள்ள அமெரிக்க நட்சத்திர இரட்டையர் டென்னிஸ் வீரர்களான பாப் பிரையன்-மைக் பிரையன் இணையிடம் பயஸ்-லூயி இணை 3- 6, 3- 6 என்ற செட் கணக்கில் தோல்வி தழுவியது.
இதனால் மற்றொரு இரட்டையர் இணையான பூபதி-நோல்ஸ் இணையுடம் இரட்டையர் இறுதியில் பிரையன் சகோதரர்கள் இணை மோதுகிறது.
9 முறை அன் ஃபோர்ஸ்டு தவறுகளை செய்தனர் பயஸ்-லூயி இணை, மாறாக பிரையன் சகோதர்கள் ஒரே ஒரு முறைதான் இத்தவறை செய்தனர்.
மேலும் சர்வ்களில் பயஸ்-லூயி இணை கோட்டை விட்டனர். 8 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளை அளித்த பயஸ்-லூயி இணை அதில் 5 முறை தோல்வி தழுவினர். மாறாக பயஸ்-லூயி இணைக்கு பிரையன் சகோதர்கள் சர்வை முறியடிக்க 2 வாய்ப்புகளே கிட்டியது. அதனை வென்றும் போட்டியை வெல்ல முடியவில்லை.