Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவானோவிச்சை வீழ்த்தினார் வீனஸ்!

Advertiesment
இவானோவிச்சை வீழ்த்தினார் வீனஸ்!
, ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (05:16 IST)
அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், செர்பிய நட்சத்திர வீராங்கனை இவானோவிச்சை 4- 6, 6- 3, 6- 4 என்ற செட்களில் வீழ்த்தி ஜூரிச் ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

விம்பிள்டன் வெற்றிக்கு பிறகு தற்போது வீனஸ் வில்லியம்ஸ் முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

முதல் செட்டில் 3- 0 என்று முன்னிலை பெற்றிருந்த வீனஸ் அந்த செட்டில் தோல்வி தழுவினார். ஆனால் அடுத்த இரண்டு செட்களில் அபாரமாக விளையாடி இவானோவிச்சை வீழ்த்தினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலிய வீராங்கனை பென்னெட்டா ஸ்பெயினின் மெதீனா காரிக்கை 6- 3, 7- 6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதியில் வீனஸை சந்திக்கிறார்.

கடைசியாக பென்னெட்டாவும்- வீனஸ் வில்லியம்சும் மோதிய 3 போட்டிகளிலும் வில்லியம்ஸ் தோல்வி தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil