ஜெர்மனியில் நடைபெற்ற பிட்பர்கர் ஓபன் கிராண்ட் பிரீ பேட்மின்டன் தொடரில், முதன் முதன்லாக, இந்திய பேட்மின்டன் வரலாற்றில் ஒற்றையர் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவெனில் ஒற்றையர் இறுதியில் எதிர்த்து விளையாடியவரும் இந்திய வீரரே. அரவிந்த் பட் என்ற வீரரை சேத்தன் ஆனந்த் 23- 25, 24- 22, 23- 21, என்ற செட்களில் ஒரு மணி நேரம் போர்டாடி வீழ்த்தினார்.
காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ள சேத்தன், தற்போது கிராண்ட் பிரீ பேட்மின்டன் போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஆண்/பெண் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்திய இணையான திஜு-ஜ்வாலா குத்தா இணை டென்மார்க் இணையை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.