Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சின்சினாட்டி அரையிறுதியில் பூபதி இணை!

சின்சினாட்டி அரையிறுதியில் பூபதி இணை!
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (19:17 IST)
சின்சினாட்டி நகரில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு மகேஷ் பூபதி-நெளலஸ் (பஹமாஸ்) இணை தகுதி பெற்றுள்ளது.

காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் மார்டி ஃபிஷ் - ஜான் இஸ்நெர் இணையுடன் பூபதி இணை கடுமையாக மோதியது. இதில் 7-5, 6-7(5), 12-10 என்ற செட்கள் கணக்கில் பூபதி இணை வென்றது.

கடந்த ஏப்ரலில் நடந்த மான்டி-கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடருக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் சோபிக்காத பூபதி இணை தற்போது மீண்டும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதியில், போலாந்தின் மரியஸ்-மர்சின் இணையை எதிர்த்து பாப்-மைக் பிரையன் சகோதரர்கள் விளையாடினர். இதில் பிரையன் சகோதரர்கள் 6-4, 7-6 என்ற நேர்செட்களில் எளிதில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

பூபதி-நெளலஸ் இணை, பிரையன் சகோதரர்களுடன் அரையிறுதியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil