Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேட்மிண்டன்: இந்தியாவின் சைனா அரையிறுதியில்!

Advertiesment
பேட்மிண்டன்: இந்தியாவின் சைனா அரையிறுதியில்!
, வெள்ளி, 13 ஜூன் 2008 (21:15 IST)
சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் தேச சாம்பியன் சைனா நேவால் முன்னேறியுள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள சைனா நேவால், இன்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் ஃபிர்டாசாரி அட்ரியாண்டியை 21-16, 20-22, 21-16 என்ற செட்கள் கணக்கில் வென்றார்.

முதல் செட்டில் மிகத் திறமையாக ஆடி வென்ற சைனா, இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடித் தோற்றார். ஆனால் மூன்றாவது செட்டில் மிக சிறப்பாக ஆடி 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார்.

அரையிறுதியில், ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் வெங்கல பதக்கம் வென்ற சீன வீராங்கனை மீ ஜாவ்- உடன் மோதுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil