Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரையிறுதியில் ஃபெடரர், மான்ஃபில்ஸ்!

அரையிறுதியில் ஃபெடரர், மான்ஃபில்ஸ்!
, வியாழன், 5 ஜூன் 2008 (12:15 IST)
பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் சுவிஸ். வீரர் ரோஜர் ஃபெடரர், பிரான்ஸ் வீரர் டேவிட் மானொஃபில்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடந்த காலஇறுதியில் முதல் நிலை வீரர் ரோஜர் பெடரரும், சிலி வீரர் பெர்னாண்டோ கோன்சலேசும் மோதினார்கள். இதில் முதல் செட்டை இழந்த ஃபெடரர் அதன் பிறகு சுதாரித்து ஆடி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். முடிவில் ஃபெடரர் 2- 6 6- 2, 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக 16-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் சிறப்பை அவர் பெற்றார். இதுவரை 12 கிராண்ட்லாம் பட்டம் வென்றுள்ள ஃபெடரர் இன்னும் பிரெஞ்சு ஓபனை மட்டும் வெல்ல வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் பெர்ரர் (ஸ்பெயின்), மான்பில்ஸ் (பிரான்ஸ்) ஆகியோர் மோதிய மற்றொரு கா‌ல் இறுதியில் 5ம் தரவரிசை வீரர் டேவிட் பெர்ரர் 3- 6, 6- 3, 3- 6, 1- 6 என்ற செட்களில் அதிர்ச்சித் தோல்வி தழுவினார். இதனால் மான்ஃபில்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

மக‌ளி‌ர் ஒ‌ற்றைய‌ர் கால் இறுதியில் ரஷிய வீராங்கனைகள் டெமன்டிவா, டினரா சபீனா ஆகியோர் மோதினார்கள். இதில் முதல் செட்டை வென்று 2-வது செட்டில் 5௨ என்ற முன்னிலை வகித்து வெற்றியை நெருங்கிய நேரத்தில் டெமன்டிவா தடுமாறினார்.

இதன் பிறகு வீறு கொண்டு எழுந்த சபீனா 2-வது செட்டை போராடி தனதாக்கினார். 3-வது செட்டில் ஒரு ஆ‌ட்ட‌த்தை கூட விட்டு கொடுக்காமல் டெமன்டிவாவை தடுமாறச் செய்தார்.

முடிவில் 4- 6, 7- 6(7- 5), 6- 0 என்ற செட் கணக்கில் சபீனா வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இதே போன்ற நிலைமையில் இருந்து மீண்டு 4-வது சுற்றில் ஷரபோவாவையும் சபீனா விரட்டியது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக அரைஇறுதிக்கு வந்திருக்கும் சபீனா, அடுத்து குஸ்னட்சோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். மற்றொரு அரை இறுதியில் செர்பிய வீராங்கனைகள் இவானோவிச், ஜான்கோவிச் மோத உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil