Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபிரெஞ்ச் ஓபன் : அரையிறுதியில் சுவட்லானா குஸ்நட்சோவா!

ஃபிரெஞ்ச் ஓபன் : அரையிறுதியில் சுவட்லானா குஸ்நட்சோவா!
, புதன், 4 ஜூன் 2008 (20:01 IST)
ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் அரையிறுதிக்கு ரஷ்ய வீராங்கனை ஸ்வட்லானா குஸ்நட்சோவா(4) முன்னேறியுள்ளார்.

பாரீஸ் நகரிலுள்ள ரோலண்ட் காரோசில் சற்று முன் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டியில், எஸ்டோனியா வீராங்கனை காய்யா கனேபியை 7-5, 6-2 என்று நேர் செட்களில் குஸ்நட்சோவா தோற்கடித்தார்.

தற்பொழுது நடைபெற்றுவரும் மற்றொரு காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனைகள் சஃபீனா (13) - டீமென்டீவா (7) விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil